தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை வழக்கில் துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறல்


தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை வழக்கில் துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறல்
x
தினத்தந்தி 13 Jun 2021 12:47 AM IST (Updated: 13 Jun 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காததால் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

குன்னம்:

கொலை- கொள்ளை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி அறிவழகி. வீட்டில் இருந்த இந்த தம்பதியை, கடந்த 8-ந்தேதி மர்மநபர்கள் கொலை செய்து விட்டு, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் திணறல்
மேலும் இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் கொலையாளிகள் குறித்து சரியான துப்பு கிடைக்காததால், அவர்களை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

Next Story