நெல் எந்திர நடவு பணிகளை அதிகாரிகள் ஆய்வு
செங்கோட்டை வட்டாரத்தில் நெல் எந்திர நடவு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். செங்கோட்டை வட்டாரத்தில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்வதற்காக புளியரை பகுதியில் விவசாயிகள் மேட்டுப்பாத்தி பாய் நாற்றங்கால் அமைத்துள்ளனர். அதனை தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தவமுனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துணை இயக்குனர்) பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
செங்கோட்டை பகுதியில் தற்போதைய நெல் சாகுபடி நிலவரங்கள் குறித்து வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் விளக்கிக் கூறினார்.
Related Tags :
Next Story