ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்:
ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் வாகன சோதனை
சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கையொட்டி சட்டவிரோதமாக மது மற்றும் சாராயம் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து சேலம் மாவட்டம் கருமந்துறைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கருமந்துறை அடிவாரம் பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.
கார், கஞ்சா பறிமுதல்
அப்போது காரில் இருந்த ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த மோனோ சிரஞ்சீவி (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் அவர் மெடிக்கல் அவசரம் என்ற இ-பதிவு செய்ததற்கான ஆவணத்தை காட்டினார். இருந்தாலும் போலீசார் அவருடைய காரை சோதனை செய்தனர்.
இதில் காருக்குள் 2 சிறிய மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை எடுத்து சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோனோ சிரஞ்சீவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 24 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story