சேலம் மாவட்டத்துக்கு மேலும் 18,300 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தன


சேலம் மாவட்டத்துக்கு மேலும் 18,300 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தன
x
தினத்தந்தி 13 Jun 2021 2:54 AM IST (Updated: 13 Jun 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்துக்கு மேலும் 18 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தன.

சேலம்:
சேலம் மாவட்டத்துக்கு மேலும் 18 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தன.
தடுப்பூசி டோஸ்கள்
சேலம் மாவட்டத்தில் ஆயிரத்தை தாண்டி சென்ற கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதேபோல் உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை காரணமாக பலருக்கு போட முடியவில்லை. இதனால் பலர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் டோஸ்கள் தட்டுப்பாடு காரணமாக 3 நாட்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
18,300 கோவிஷீல்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 500 கோவேக்சின் தடுப்பூசி டோஸ்கள் வந்தன. இதையடுத்து உடனடியாக மாவட்டத்தில் தடுப்பூசி போடும் மையங்களுக்கு டோஸ்கள் அனுப்பப்பட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனிடையே நேற்று சென்னையில் இருந்து வாகனம் மூலம் மேலும் 18 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சேலத்துக்கு வந்தன.
இதில் சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 14 ஆயிரத்து 200-ம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 4 ஆயிரத்து 100-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த டோஸ்கள் உடனடியாக பிரித்து கொடுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story