மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் 120 டன் ஆக்சிஜன் திருச்சி வந்தது


மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் 120 டன் ஆக்சிஜன் திருச்சி வந்தது
x
தினத்தந்தி 13 Jun 2021 4:12 AM IST (Updated: 13 Jun 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் 120 டன் ஆக்சிஜன் திருச்சி வந்தது.

திருச்சி,

மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் 120 டன் ஆக்சிஜன் திருச்சி வந்தது.

கொரோனா நோயாளிகள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. 
வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

 இந்தநிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிமாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ரெயில் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

120 டன் ஆக்சிஜன்

அந்தவகையில் திருச்சி குட்ஷெட் யார்டுக்கு ஒடிசா உள்பட ஒரு சில மாநிலங்களில் இருந்து இதுவரை மூன்று கட்டங்களாக டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து நேற்று ரெயில் மூலம் 6 டேங்கர்களில் மொத்தம் 120 டன் ஆக்சிஜன் திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வந்தது. 

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்து உரிய பாதுகாப்புடன் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story