ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து


ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 13 Jun 2021 11:22 AM IST (Updated: 13 Jun 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஸ்ரீபெரும்புதூர், 

ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு  சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு மினி லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. லாரியை வேலூரை சேர்ந்த இன்பராஜ் ஓட்டி சென்றார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னாலூர் சுங்கசாவடி அருகே செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவரில் மோதி 6 டயர்கள் மற்றும் டீசல் டேங்க் துண்டிக்கப்பட்டு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் இன்பராஜ் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

பொருட்கள் அனைத்தும் சிதறி வீணானது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.


Next Story