கும்மிடிப்பூண்டி அருகே கத்திமுனையில் தொழிலாளியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கத்திமுனையில் தொழிலாளியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சந்திரன் (வயது 36). இவர் நேற்று முன்தினம் மாலை குருவாட்சேரி பகுதியில் கூலிவேலை செய்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஏனாதிமேல்பாக்கம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், சந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது கொண்ட 2 சிறுவர்கள் மற்றும் பொன்னேரியை சேர்ந்த விஜயன் (22) உள்பட மொத்தம் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள படூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு படூர் காலனி கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 35) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிரகாஷ் வழக்கம்போல் அந்த நிறுவனத்தில் பணி செய்தபோது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றனர்.
உடனே பொது மக்கள் அவர்களை விரட்டிச் சென்றனர். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர்.
இது சம்பந்தமாக திருவள்ளூர் அருகே வெள்ளவேடு அருகே உள்ள உள்ள படூர் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த விஜய் (21) என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

Related Tags :
Next Story