பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள்


பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள்
x
தினத்தந்தி 13 Jun 2021 3:14 PM IST (Updated: 13 Jun 2021 3:17 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மளிகை பொருட்களை நகராட்சி ஆணையாளர் வழங்கினார்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி 55 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் வெளியே நடமாட முடியாத வகையில் தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொடுக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 42 ஆக குறைந்து உள்ளது. அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட சிவசண்முக நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மளிகை பொருட்களை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

வெளியே செல்லக்கூடாது

கூடலூர் நகராட்சி பகுதியில் இதுவரை 2 ஆயிரத்து 400 பேருக்கு மளிகை, காய்கறி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் வீடு, வீடாக சென்று தொற்று கண்டறிய 160 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் நோய் அறிகுறிகள் தென்பட்டால் தன்னார்வலர்களிடம் முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் எக்காரணத்தைக்கொண்டும் வெளியே செல்லக்கூடாது. இதேபோல் வெளி நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் செல்ல கூடாது. இதை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story