தூத்துக்குடியில் 11 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
தூத்துக்குடியில் 11 வாகனங்களின் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 11 வாகனங்களின் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்ணாடி உடைப்பு
தூத்துக்குடி ராஜீவ்நகர், அன்னை தெரசா நகர், பர்மாகாலனி, பாரதிநகர், நிகிலேசன் நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் வீட்டின் முன்பு கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம்.
இதேபோன்று நேற்று முன்தினம் இரவு தங்களது வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தனர். நேற்று காலையில் பார்த்த போது பலரது வாகனங்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தனர்.
11 வாகனங்கள்
அதன்பேரில் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த 9 கார்கள், ஒரு வேன், ஒரு ஆட்டோ ஆகிய 11 வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர்கள் சிலர் கல்லால் கார் கண்ணாடியை உடைப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story