டெல்டாவில், கொரோனாவுக்கு 21 பேர் பலி ஒரே நாளில் 1,325 பேருக்கு தொற்று
டெல்டாவில், கொரோனாவுக்கு 21 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 1,325 பேருக்கு தொற்று உறுதியானது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 621 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 50 ஆயிரத்து 526 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 55, 59, 60, 75 வயதுடைய 4 பெண்களும், 30 வயது ஆணும் என 5 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகையில், 13 பேர் சாவு
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 419 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 691 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 31 ஆயிரத்து 139 பேர் குணம் அடைந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42, 47, 55, 55, 55, 55, 62, 65, 67, 72, 72, 80, 80 வயதுடைய 13 ஆண்கள் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூரில், 3 பேர் பலி
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 579 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 32 ஆயிரத்து 38 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36, 58 வயதுடைய 2 ஆண்களும், 61 வயது பெண்ணும் என 3 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story