திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 20 டன் அணை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 20 டன் அணை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்பூர்
திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 20 டன் அணை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
20 டன் மீன்கள்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சந்தைக்கு உள்புறம் மற்றொரு பகுதிகளில் மீன் சந்தை உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி செல்வார்கள்.
மற்ற நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே நேற்று மீன் மார்க்கெட்டிற்கு 20 டன் அணை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
விரைவாக
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மார்க்கெட்டிற்கு சென்னை, தூத்துக்குடி, ஆந்திரா, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். வழக்கமாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் ஒன்றுக்கு 40 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் கடல் மீன்கள் விற்பனைக்கு திருப்பூருக்கு கொண்டுவரப்படவில்லை.
மாறாக ஆந்திராவில் இருந்து அணை மீன்கள் மட்டுமே 20 டன்கள் கொண்டுவரப்பட்டன. இந்த மீன்களும் விரைவாக விற்பனையாகின. மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த பின்னர் தான் கடல் மீன்கள் வழக்கம் போல் திருப்பூர் சந்தைக்கு வரும். கடல் மீன்களை தான் பொதுமக்கள் அதிகம் விரும்புவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story