டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 13 Jun 2021 9:19 PM IST (Updated: 13 Jun 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என வலியுறுத்தியும் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ஓடக்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கைகளில் விளம்பர பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதுபோல் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்
பல்லடம் வடுகபாளையத்தில் பா.ஜ.க திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் வினோத் வெங்கடேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது எனறும், தமிழ்நாடு அரசைக்கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி
இதுபோல் ஊத்துக்குளி பகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடை திறக்கும்  அரசை கண்டித்து வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஊத்துக்குளி தாலுகாவை சார்ந்த பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 
ஊத்துக்குளி ஒன்றிய தலைவர் சத்தி கதிரவன், மகளிர் அணி மாவட்டச்செயலாளர் அஜிதா பார்த்திபன், ஒன்றிய பொதுச்செயலாளர் மாரிமுத்து, இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரமேஷ், அமைப்புசாரா தலைவர் சக்திவேல் மற்றும் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வேணுகோபால் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர்
இதுபோல் திருப்பூரில் வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் நல்லூர் மண்டலத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ராக்கியப்பாளையம் பிரிவு 4-நாள் ரோடு காங்கேயம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அரசு தொடர்பு பிரிவு தலைவர் விஜயகுமார், அருவி சதாசிவம், செந்தில், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story