ஜமாபந்தி மனுக்களை இ-சேவை மையம் மூலம் அனுப்ப வேண்டும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


ஜமாபந்தி மனுக்களை இ-சேவை மையம் மூலம் அனுப்ப வேண்டும்  கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 9:31 PM IST (Updated: 13 Jun 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி மனுக்களை இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி மனுக்களை இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஜமாபந்தி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்து உள்ளது. மேலும் வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவுரையின்படி வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.

வருவாய் தீர்வாய நாட்களில் பொது மக்கள் வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் நேரில் வந்து ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக, தங்கள் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரையிலான நாட்களில் ஜமாபந்தி கோரிக்கை தொடர்பான மனுக்களை பதிவு செய்து தீர்வு காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மனுக்கள்

ஆகையால் பொதுமக்கள் ஜமாபந்தி நாட்களில் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் வந்து மனுக்களை அளிக்க வேண்டாம். மக்கள் இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே ஜமாபந்தி மனுக்களை அடுத்த மாதம் 31-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story