கோத்தகிரி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது


கோத்தகிரி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2021 10:08 PM IST (Updated: 13 Jun 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோத்தகிரி

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் நேற்று கொட்டக்கம்பை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது கொட்டக்கம்பை, பாரதிநகரை சேர்ந்த காளிமுத்து (வயது 42) என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊறலை பறிமுதல் செய்து அதை அழித்தனர். மேலும் அவரது வீட்டில் வைத்திருந்த 2 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் கேர்பெட்டா கே.கே.நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 5 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக சீனிவாசன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story