வணிகர் சங்கங்களின் சார்பில் கடலூர் முதுநகரில், கொரோனா தடுப்பூசி முகாம்


வணிகர் சங்கங்களின் சார்பில் கடலூர் முதுநகரில், கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:26 PM IST (Updated: 13 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

வணிகர் சங்கங்களின் சார்பில் கடலூர் முதுநகரில், கொரோனா தடுப்பூசி முகாம்.

கடலூர் முதுநகர்,

கடலூர் வணிகர் சங்க தலைவர் ஜி.ஆர். துரைராஜ் ஆலோசனையின் பேரில், கடலூர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் வர்த்தக சங்கத்தின் சார்பாக கடலூர் முதுநகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதற்கு கடலூர் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கடலூர் துறைமுக பகுதி செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். டாக்டர் அபிநயா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

குறிப்பாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ள 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பாண்டியன், விக்னேஷ், அச்சுதன், கணேஷ், மாரியப்பன், வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story