காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி
கம்பம் நகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பம்:
கம்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை, ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கு ஆகிய பகுதிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் நந்தகோபால்சாமி நகரில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 200 டன் வரை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமாரிடம் கேட்டபோது, கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சி பகுதிகளில் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகின்றன.
மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்படுகின்றன. விவசாயிகள் இந்த உரத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதேபோல் வீடுகளில் மாடி தோட்டம் அமைப்பவர்களுக்கு இலவசமாக உரம் வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story