கொரோனா நிவாரணம் கேட்டு தாசில்தாரிடம் மனு
முடிதிருத்தும் தொழிலாளர்கள் கொரோனா நிவாரணம் கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புகோட்டை பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் நிலையங்கள் உள்ளன. கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் சலூன் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் முடி திருத்தும் தொழிலாளர்கள் அருப்புக்கோட்டை தாசில் தார் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தர வால் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், தங்களின் நிலை அறிந்து முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 கொரோனா நிவாரண நிதியாக வழங்கக்கோரி தமிழக அரசிடம் பரிந்துரை செய்ய வலியுறுத்தக்கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், முத்துராமன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி நிர்வாகிகள் முருகன், காத்தமுத்து, கணேசன், சமய சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story