கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான நிவாரண பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது
கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான நிவாரண பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில், கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் 150 பேருக்கு முக கவசம், சானிடைசர், கபசுரக் குடிநீர் மற்றும் முந்திரி, பாதாம்பருப்பு உள்பட 25 வகையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ரோட்டரி ஆளுனர் பாலாஜிபாபு வழிகாட்டுதல்படி நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ்பாபுவிடம் ஒப்படைத்தார். அப்போது, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், ரோட்டரி சங்கங்களின் சார்பாக முன்னாள் உதவி ஆளுனர் அப்பர்சாமி, உதவி ஆளுனராக பதவியேற்க உள்ள வெங்கடேஷ், மிட் டவுன் சாசன தலைவர் சுரேந்திரா, மருத்துவமனை டாக்டர் ப.ராஜேந்திரன், சங்க தலைவர்கள் ராஜேந்திரன், ராமநாதன், சுப்ரமணியன், நட்ராஜ், முன்னாள் தலைவர் பத்மகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story