மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
நெகமம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நெகமம்
நெகமம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி
நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான ஆண்டிபாளையம், வகுத்தம்பாளையம், செங்குட்டுபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பந்தல் காய்கறிகள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த பகுதியில் தற்போது 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயிகள் ஆர்வம்
நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் மண், மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்றமாக இருக்கிறது. அத்துடன் அவற்றை பராமரிக்கும் செலவும் குறைவு.
இதனால் இங்கு அவற்றை அதிகளவில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இங்கு முள்ளுவாடி, ஏத்தாப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விதை கரணைகளாக நடவு செய்யப்படுகிறது.
சாகுபடி செய்த நாளில் இருந்து 8 முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
20 டன் மகசூல்
இதற்கு தண்ணீரும் அதிகளவில் தேவை இல்லை. 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சினால் போதும். ஒரு ஏக்கரில் அதிகபட்ச மாக 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.
இந்த கிழங்கு ஜவ்வரிசி தயாரிக்க பயன்படுத்துவதால் பல்வேறு பகுதிகளில் இ்ருந்து விளைநிலங்களுக்கே வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கிறார்கள்.
சில நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடியில் மாவுப்பூச்சி, வெள்ளை ஈ, சிலந்திப்பேன், தேமல் நோய், இலைப்புள்ளி நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.
மேலும் மகசூல் அதிகம் கிடைத்தாலும் போதிய விலை கிடைப்பது இல்லை.
விலை நிர்ணயம்
அதிகபட்சமாக கிலோ ரூ.10 வரை கிடைக்கிறது. அதுவும் அந்த கிழங்கில் உள்ள டார்ச் அடிப்படையில்தான் விலை நிர்ணயிக்கப் படுகிறது.
எனவே விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவும், பூச்சிகள் தொல்லையில் இருந்து பாதுகாக்கவும் அதிகாரிகள் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
அதுபோன்று தோட்டக்கலைத்துறையினர் சாகுபடியை அதிகாரிக்க தொழில்நுட்ப உதவிகள் வழங்கினால் உதவியாக இருக்கும்.
மேலும் விலை வீழ்ச்சியை தடுக்க வேளாண் விற்பனை வாரியம் மூலம் விலை நிர்ணயம் செய்தால் கட்டுப்படியான விலை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story