விதியை மீறி செயல்பட்ட 2 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை; அதிகாரிகள் நடவடிக்கை


விதியை மீறி செயல்பட்ட 2 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை; அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 11:36 PM IST (Updated: 13 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

விதியை மீறி செயல்பட்ட 2 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

தர்மபுரி,

பென்னாகரம் வட்டாரத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில்  தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 2 உர கடைகளில் விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாமலும், உரங்களின் விற்பனை விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்படாமலும் இருப்பது தெரியவந்தது. 

விதிகளை மீறி செயல்பட்ட அந்த 2 கடைகளில் உர விற்பனைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். அப்போது அரசு நிர்ணயித்துள்ள மானிய விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விலைப்பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். விற்பனை முனைய கருவியின் மூலம் விவசாயிகளின் ஆதார் எண்ணை பெற்று உர விற்பனை செய்ய வேண்டும். உர விற்பனை நிலையங்கள் உரிமத்தை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டது.

Next Story