டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை


டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
x
தினத்தந்தி 13 Jun 2021 11:36 PM IST (Updated: 13 Jun 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை மேற்கொண்டார்.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 68 டாஸ்மாக்  கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று திறக்க டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து உள்ளது. 

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். 

அவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும். கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் டோக்கன் வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பேரிகார்டு அமைக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன், கோட்ட ஆய அலுவலர் கலைச்செல்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் புஷ்பராஜ், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, கருணாகரன், சவுந்தரராஜன், ரவிக்குமார், ராஜா சோமசுந்தரம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story