தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறிய 164 பேர் மீது வழக்கு-58 வாகனங்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறிய 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சென்ற 153 பேருக்கு போலீசார் ரூ.30 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர். இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 11 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 164 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் விதிமீறல் தொடர்பாக 58 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story