கொரோனா தொற்று ஒழிய வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு
கொரோனா தொற்று ஒழிய வேண்டி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள கோபாலகிருஷ்ணருக்கு நேற்று சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து மாலையில் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், மக்கள் நலமோடு வாழ வேண்டியும் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் கொடிய தொற்று நோய், கொரோனா, காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களும் நீங்குவதற்கு மேள நாதஸ்வரக்கலைஞர்கள் ஆனந்தபைரவி, ஜெகன்மோகினி உள்ளிட்ட பல ராகங்களில் நாதஸ்வரத்தை இசைத்தனர்.
இதைத்தொடர்ந்து எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பில் நாதஸ்வரமேளக் கலைஞர்கள், வில்லிசைக் கலைஞர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. இதை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் தென்மண்டல அனைத்து கலைச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பொன்பாண்டியன், பொதுச் செயலாளர் தோட்டாக்குடி மாரியப்பன், வில்லிசை கலைஞர் முத்தரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story