நெல்லையில் இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


நெல்லையில் இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 1:02 AM IST (Updated: 14 Jun 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை:
ஊரடங்கு தளர்வில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால், நெல்லையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இறைச்சி கடைகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.
விடுமுறை நாளான நேற்று நெல்லையில் உள்ள கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று கடைகளில் இறைச்சி வாங்கி சென்றனர். மீன் கடைகளிலும் மீன்கள் விற்பனை அதிகரித்தது.

ஆர்வமுடன்...

நெல்லை டவுன் வழுக்கோடை பகுதி, சந்திப்பு, பாளையங்கோட்டை சமாதானபுரம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் அதிகாலையில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் இறைச்சி வாங்கி சென்றனர்.

Next Story