கல்லிடைக்குறிச்சி அருகே கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்
கல்லிடைக்குறிச்சி அருகே முட்புதர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தன.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் முட்புதர் செடிகளுக்குள் மூட்டைகள் கிடப்பதாக அம்பை சிவில் சப்ளை தாசில்தார்அருண் பிரபாகர் செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகு முத்து மாரியம்மன், மீனாட்சி சுந்தரம், கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு கிடந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 54 சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 2,400 கிலோ ஆகும். இதனை அதிகாரிகள் கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story