நெல் கொள்முதல் மையங்களை சீரமைக்க கோரிக்கை


நெல் கொள்முதல் மையங்களை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2021 1:14 AM IST (Updated: 14 Jun 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் மையங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பிலியபுரம், 

உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளின் நலன் கருதிய மாவட்ட நிர்வாகம், 4 இடங்களில் அரசு நெல் கொள்முதல் மையங்களை தொடங்கி உள்ளது. தற்போது இங்கு நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. குறுவை சாகுபடியில் நெல் வரத்து அதிகமாக உள்ளதால், வைரிசெட்டிப்பளையம், பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி மற்றும் வடக்கிப்பட்டி ஆகிய 4 மையங்களிலும், நெல் குவியல்கள் தேங்கியுள்ளன. அறுவடை செய்த நெல், மையங்களில் கொட்டப்பட்டு, 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 
மழையின் காரணமாக, நெல் குவியல்கள் மழையில் நனைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நெல் கொள்முதல் மையங்களில் களம் அமைத்து கொடுத்து, நாளொன்றுக்கு கொள்முதல் திறனான 40 டன் என்ற இலக்கை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story