மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 14 Jun 2021 4:07 AM IST (Updated: 14 Jun 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர்:
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்றுமுன்தினம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 170 கனஅடி வீதம் வந்தது. அணையில் இருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 764 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர் வரத்து மிகவும் குறைந்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. 
நேற்றுமுன்தினம் 96.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 96.33 அடியாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

Next Story