பாம்புகள் நடமாட்டத்தால் போலீஸ் நிலைய வளாகத்தில் செடி, கொடிகள் அகற்றம்


பாம்புகள் நடமாட்டத்தால் போலீஸ் நிலைய வளாகத்தில் செடி, கொடிகள் அகற்றம்
x
தினத்தந்தி 14 Jun 2021 8:06 AM IST (Updated: 14 Jun 2021 8:06 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் முட்செடிகளும், புதர்களும் சூழ்ந்து காட்சி அளித்தன.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம மாமல்லபுரம் போலீஸ் நிலைய பின்புற வளாகம், மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் முட்செடிகளும், புதர்களும் சூழ்ந்து காட்சி அளித்தன. குறிப்பாக விபத்துகளில் சிக்கி சுக்குநூறான கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் அங்குள்ள மைதானத்தில் குவியல், குவியலாக குவித்து வைத்திருந்தனர். பாம்பு, விஷ பூச்சிகள் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றி இருந்த புதர்களில் இருந்த விஷ பாம்புகள் அடிக்கடி இந்த பகுதியில் ஊர்ந்து சென்ற நிலையில் அங்கு வரும் பொதுமக்களையும், போலீசாரையும் அச்சுறுத்தி வந்தன. இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள், மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் முட்கள் புதர்களையும், செடி, கொடிகளையும் அகற்றி பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாடாத வகையில் கிருமி நாசினி தெளித்தும், சுண்ணாம்பு பவுடர் தெளித்தும் சுத்தம் செய்தனர்.

இதையடுத்து நேற்று மாமல்லபுரம் வருகை தந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போக்குவரத்து போலீஸ் நிலைய பகுதி மற்றும் மகளிர் போலீஸ் நிலைய பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அங்கு துப்புரவு பணிகளை மேற்கொண்ட போக்குவரத்து போலீசாரையும் துப்புரவு பணியாளர்களையும் பாராட்டினார்.

Next Story