கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது


கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2021 8:34 AM IST (Updated: 14 Jun 2021 8:34 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேப்பம்பட்டு அயத்தூர் கிராமம், மேட்டு காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் சாலையில் நின்று கொண்டு கத்தியால் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அஜித்தை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story