சென்னை வீதிகளில் வலம் வரும் குப்பை வாகனங்களில் ஒலிபரப்பப்படும் பாடல் வெளியீடு ‘‘இது நம்ம சென்னை தான்யா...சிங்கார சென்னை தான்யா...’’


சென்னை வீதிகளில் வலம் வரும் குப்பை வாகனங்களில் ஒலிபரப்பப்படும் பாடல் வெளியீடு ‘‘இது நம்ம சென்னை தான்யா...சிங்கார சென்னை தான்யா...’’
x
தினத்தந்தி 14 Jun 2021 11:17 AM IST (Updated: 14 Jun 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை முழுவதும் வீதிகளில் வலம் வரும் குப்பை வண்டிகளில், இனி விசில் சத்தத்துக்கு பதிலாக, விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்து வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் புதிய ஏற்பாட்டை சென்னை மாநகராட்சி செய்து வந்தது.

சென்னை, 

அந்தவகையில் அந்த விழிப்புணர்வு பாடலை சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டது. அந்த பாடலில், ‘‘நம்ம ஊரு... செம ஜோரூ... சுத்தி பாரு... சுத்தம் பாரு... இது நம்ம சென்னை தான்யா... நம்ம ஊரு... நல்ல பேரு.... சொல்லும் பாரு... சிங்கார சென்னை தான்யா... தூய்மையான வீதினா குப்பை வண்டினால தான்... வண்டிக்குள்ள குப்பைய பிரிச்சு போடுணா... சுத்தமான ஊருனா நம்ம சென்னை தாங்கணா... வீட்டை போல நாட்டை ஆக்க ஒன்றாய் சேருவோம் வா...’’ போன்ற வாசகங்கள் பாடலில் இடம் பெற்றுள்ளது.

காலையில் வீதிகளில் வரும் குப்பை வாகனங்களில், விசில் சத்தம் கேட்டு, வீடுகளில் சேகரித்து வைத்திருந்த குப்பைகளை போட வரும் பொதுமக்களுக்கு இந்த பாடல் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், விசில் சத்தம் கேட்டு அலுத்து போன பொதுமக்களிடையே இந்த விழிப்புணர்வு பாடல் வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story