திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை


திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jun 2021 3:39 PM IST (Updated: 14 Jun 2021 3:39 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சியில் துப்புரவு அலுவலராக பணி புரிந்து வருபவர் ராமச்சந்திரன். இவரிடம் திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்த சுந்தர் (வயது27) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக சுந்தர், ராமச்சந்திரன் வீட்டில் தங்கி வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் சுந்தர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் திருவாரூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தரின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story