சீர்காழி வட்டாரத்தில் தடுப்பூசி முகாம்


சீர்காழி வட்டாரத்தில் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 14 Jun 2021 5:25 PM IST (Updated: 14 Jun 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி வட்டாரத்தில் தடுப்பூசி முகாம்.

திருவெண்காடு,

சீர்காழி வட்டார சுகாதாரத்துறை சார்பில் நேற்று திருவெண்காடு, அகனி ஆகிய பகுதிகளில் 18 வயதில் இருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த பணிகளை வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் காத்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், டாக்டர் அமிழ்தினி, சுகாதார செவிலியர்கள் புஷ்பா, உஷா, மருந்தாளுனர் கோசலை, பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மனோஜ்குமார், வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். ஒரே நாளில் 750 பேருக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.. இதே போல் அகனியில் நடந்த முகாமில் 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Next Story