ஜோலார்பேட்டை பகுதியில் வெறிச்சோடி காணப்பட்ட டாஸ்மாக் கடைகள்


ஜோலார்பேட்டை பகுதியில்   வெறிச்சோடி காணப்பட்ட டாஸ்மாக் கடைகள்
x
தினத்தந்தி 14 Jun 2021 6:33 PM IST (Updated: 14 Jun 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை பகுதியில் வெறிச்சோடி காணப்பட்ட டாஸ்மாக் கடைகள்

ஜோலார்பேட்டை

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி விற்பனையாளர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும், தடுப்புகள் அமைத்தும் நேற்று டாஸ்மாக் கடைகளை திறந்தனர்.

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய மதுபான விற்பனை மாலை 5 மணிவரை நடந்தது. மதுபானப் பாட்டில்களை வாங்க மதுபிரியர்கள் யாரும் முன் வரவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து மதுபானப் பிரியர் ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் போதிய மதுபானங்கள் இல்லை. குறைந்த விலையில் உள்ள மதுபானங்கள் இல்லாமல் டாஸ்மாக் கடைகளை திறந்தும் எங்களுக்கு பலன் இல்லை. கடை திறந்த முதல் நாள் என்பதாலும், போதிய இருப்பு இல்லாததாலும், மதுபானப் பிரியர்கள் இன்றி டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன, என்றார்.

Next Story