ராணிப்பேட்டையில் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கிச்சென்ற மது பிரியர்கள்


ராணிப்பேட்டையில் வரிசையில் நின்று மதுபாட்டில்கள்  வாங்கிச்சென்ற மது பிரியர்கள்
x
தினத்தந்தி 14 Jun 2021 8:28 PM IST (Updated: 14 Jun 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

ராணிப்பேட்டை

டாஸ்மாக் கடைகள் திறப்பு

கொரோனா தொற்று பரவுதலை தடுக்க, தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகளுடன் அமல்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் வரிசையில் நின்று செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. 

மேலும் மதுபிரியர்கள் அமர, மதுபான கடைக்கு செல்லும் வழியில் பந்தல் அமைக்கப்பட்டு, இடைவெளியோடு, இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. மேலும் வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தது.

 வரிசையில் நின்று

நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. ஆனால் மது பிரியர்கள் காலை சுமார் 8 மணி முதல் டோக்கன் பெற்று வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர். வரிசையில் நின்ற அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். வரிசையில் நின்ற அனைவருக்கும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள் ஆர்வத்துடன் வரிசையில்நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். ராணிப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story