திண்டுக்கல் மாவட்டத்தில் 212 பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 212 பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
திண்டுக்கல்:
கொரோனா ஊரடங்கில் நேற்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 212 பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டன. மேலும் முககவசம் அணிந்த மாணவ-மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது.
இதையடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடந்தது. திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
Related Tags :
Next Story