உடுமலையில் பெய்த மழையினால், சாலையோரம் திறந்த வெளியில் இருந்த காய்கறி கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. சில வியாபாரிகள், கூடையை குடையாக பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்தனர்.
உடுமலையில் பெய்த மழையினால், சாலையோரம் திறந்த வெளியில் இருந்த காய்கறி கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. சில வியாபாரிகள், கூடையை குடையாக பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்தனர்.
உடுமலை
உடுமலையில் பெய்த மழையினால், சாலையோரம் திறந்த வெளியில் இருந்த காய்கறி கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. சில வியாபாரிகள், கூடையை குடையாக பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்தனர்.
காய்கறி கடைகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுப்பதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின்படி காய்கறி கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து உடுமலையில் ராஜேந்திரா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் திறந்த வெளியில் காய்கறிகடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் உடுமலை உழவர் சந்தை அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், உழவர் சந்தைக்கு முன்பு உள்ள கபூர்கான் வீதி, ஆசாத் வீதி ஆகிய வீதிகளில் அதிகாலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை சாலையோரம் திறந்த வெளியில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி 60-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் தள்ளுவண்டிகளிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலையில் மழை
இந்த நிலையில் நேற்று காலை உடுமலையில் மழை பெய்தது. அதனால் உழவர் சந்தைக்கு முன்பு கபூர்கான் வீதியில், காய்கறி கடைகள் வைக்கப்படும் சில இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் உழவர் சந்தைக்கு முன்பு வைக்கப்படும் காய்கறிகடைகள் கடந்த சில நாட்களை விட நேற்று குறைவாக இருந்தது. அந்த காய்கறிகடை வியாபாரிகள் சிலர் குடைகளை பிடித்தபடி உட்கார்ந்து வியாபாரம் செய்தனர். குடை இல்லாத ஓரிரு வியாபாரிகள் தாங்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக, காய்கறிகளை எடுத்துவைக்கும் கூடைகளை தலைக்கு மேலே குடைபோன்று பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்தனர். சிலர் திறந்தவெளியில் வைத்திருந்த காய்கறிகளை தார்பாயால் மூடி வைத்துவிட்டு மழையில் நனையாதபடி ஓரமாக நின்றிருந்தனர். சிலர் தூறல் மழையில் வியாபாரம் செய்ய, பொதுமக்களும் நனைந்து கொண்டே காய்கறிகளை வாங்கி சென்றனர்.
வியாபாரம் பாதிப்பு
மழையினால் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்களின் வருகையும் குறைவாக இருந்தது. அதனால் காய்கறிகள் விற்பனை பாதிக்கப்பட்டது.
இதே போன்று மழையினால் ராஜேந்திரா சாலை உள்ளிட்ட மற்ற சாலை பகுதிகளிலும் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது.
காலையில் ராஜேந்திரா சாலையில் காய்கறி கடைகள் குறைந்த அளவே இருந்தன. மழை நின்ற பிறகு ராஜேந்திரா சாலையில் காய்கறி கடைகள் அதிகரித்தன. ஆனால் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்ததால் பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. அதனால் அங்கும் காய்கறிகள் விற்பனை குறைந்திருந்தது.
Related Tags :
Next Story