பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை


பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2021 9:45 PM IST (Updated: 14 Jun 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை கள்ளக்குறிச்சி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி பேட்டி


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். இவருக்கு பதிலாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஒரு வருடமாக கடலூரில் துணை சூப்பிரண்டு பயிற்சி பெற்று வந்த ராஜலட்சுமியை கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜலட்சுமி நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உட்கோட்டத்துக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் நல்ல அணுகுமுறையுடன் நடந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னுடைய செல்போன்(8220605577) எண்ணுக்கு போன் செய்து புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story