பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூன்.15-
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், அதன் மீதான வரியை திரும்பப் பெற்று பெட்ரோல் லிட்டர் ரூ.50-க்கும், டீசல் லிட்டர் ரூ.40-க்கும் மத்திய அரசு வழங்கக்கோரி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மோட்டார் சங்க மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், துணை தலைவர் மகேந்திர குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சரக்கு ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story