ஆற்காடு அருகே விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

ஆற்காடு அருகே விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:14 PM IST (Updated: 14 Jun 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

ஆற்காடு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் அரசு விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Next Story