தடுப்பூசி போட தொடர்ந்து அலைமோதும் கூட்டம்
தடுப்பூசி போட தொடர்ந்து அலைமோதும் கூட்டம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில் தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மாநகரில் பல இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு அதன் மூலம் முன்னதாக வருகிறவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் கூட்டமும் தொடர்ந்து தடுப்பூசி போட அலைமோதி வருகிறது.
அந்த வகையில் திருப்பூரில் நேற்று சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய மார்க்கெட் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கருவம்பாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த பகுதிகளில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்று தடுப்பூசி செலுத்தி சென்றனர். சில இடங்களில் பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story