ரூ.4 கோடிக்கு மதுவிற்பனை
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
தேனி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
அவற்றில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.90 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை மதுவிற்பனை நடப்பது வழக்கம். தளர்வு அறிவிக்கப்பட்டதால் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன.
மதுப்பிரியர்கள் உற்சாகமாக வந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதனால், மது விற்பனை களைகட்டியது. ஆனால், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ரூ.17 லட்சத்து 65 ஆயிரத்து 50-க்கு பீர் விற்பனை செய்யப்பட்டது.
ரூ.3 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 130-க்கு இதர மதுபான வகைகள் விற்பனையாகின. மொத்தம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 180-க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story