ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் தொகுப்பு


ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் தொகுப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 11:42 PM IST (Updated: 14 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மளிகை பொருட்கள் தொகுப்பு

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வாழ்வா தாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

எனவே கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

 மேலும் 2-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பொருட்கள் வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம் நடந்தது. 

வினியோகம் 

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

ரேஷன் கடை ஊழியர்கள் மளிகை பொருட்களை பேக்கிங் செய்து தயார் நிலையில் வைத்து உள்ளனர். 

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் 389 ரேஷன் கடைகள் உள்ளன.

 இந்த ரேஷன் கடைகள் மூலம் 2 லட்சத்து ஆயிரத்து 993 ரேஷன்கார்டு தாரர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறியதாவது:-

ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் 

மளிகை பொருட்கள் தொகுப்பு குறைவாக வந்து உள்ளதால், ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் 50 சதவீத பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கடைகள் மூலம் குறைந்தபட்சம் 60 முதல் 100 வரை டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு வார காலத்திற்குள் மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story