பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்
பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்
ராமநாதபுரம்,ஜூன்.
அரசின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1,532 பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் வராமல் பெற்றோர்கள் மட்டும் வந்து பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
இது குறித்து முதன்மைகல்வி அலுவலர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பிளஸ்-1 சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பாட பிரிவுகளை தடை ஏதும் தெரிவிக்காமல் ஒதுக்கி வழங்கவும், நன்கொடை வசூலிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1 முதல் 11-ம் வகுப்புகள் வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து பாடபுத்தகங்களும் வந்துள்ளன. இவை அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பாட புத்தகங்களை பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டதும் இந்த பாடபுத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். வேறு பள்ளியில் சேர உள்ள மாணவர்களுக்கு மாற்று கல்வி சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story