இலவச நிலம் வழங்கி வீடு கட்டி தர வேண்டும்
சாத்தூர் பகுதியில் இலவச நிலம் வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் திருநங்கைகள் மனு அளித்தனர்.
விருதுநகர்,
சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த திருநங்கைகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சாத்தூர் அமீர்பாளையத்தில் நாங்கள் 30 திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே வாடகை வீட்டில்தான் மாதம் ரூ. 3000 கொடுத்து வசித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் இலவச நிலம் கேட்டு மனு கொடுத்தபோது எங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் போதுமான அளவு இல்லை. எனவே தாங்கள் எங்களுக்கு இலவச நிலம் வழங்குவது உடன் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம். மற்ற மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று தாங்களும் எங்களுக்கு இலவச நிலம் வழங்கி, வீடு கட்டித்தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story