90 சதவீத பட்டாசு ஆலைகள் திறப்பு
மாவட்டம் முழுவதும் 90 சதவீத பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன.
சிவகாசி,
மாவட்டம் முழுவதும் 90 சதவீத பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன.
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனால் பட்டாசு தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அரசு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை செயல்பட அனுமதித்தது.
30 சதவீத பணியாளர்கள்
இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.
அரசின் வழிக்காட்டுதல்படி 30 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பட்டாசு ஆலைகளில் வெப்பமானியை கொண்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 90 சதவீத பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு நேற்று பணிகள் நடைபெற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல் டீக்கடைகளுக்கும் அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அனைத்து டீக்கடைகளும் அரசின் வழிக்காட்டுதல்படி திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story