நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 554 பேருக்கு அபராதம்
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 554 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி வழக்குப் பதிவு, வாகனங்கள் பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 549 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story