மின்வாரிய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


மின்வாரிய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 15 Jun 2021 1:30 AM IST (Updated: 15 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

நெல்லை:

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான மின்வாரிய ஊழியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்திஅஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி கொரோனவால் மரணமடைந்த 350-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கருணை தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நிகழ்ச்சிக்கு தொ.மு.ச. நச்சினார்கினியார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. வண்ணமுத்து முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தென்கரை மகாராஜன், முத்தையா, சார்லஸ், முருகன், கிருஷ்ணன், முத்துராமன், அருண்குமார், சிவகுமார், முத்துக்குமார், இசக்கி பாண்டி, ராமர், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story