தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளில் ரூ.3¼ கோடிக்கு மது விற்பனை
தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே ரூ.3¼ கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டது.
தென்காசி:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைவாக இருந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்த கடைகள் திறக்க வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி இந்த கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் 35 நாட்களுக்குப் பிறகு 70 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. கடை முன்பு சமூக இடைவெளியில் மதுப்பிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்ல வசதியாக தடுப்பு கம்புகள் கட்டப்பட்டன. முகப்பு பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாகச் சென்று மதுபானங்களை வாங்கி சென்றனர். ஒவ்வொரு கடைகளின் அருகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குறைவான கூட்டம் இருந்த போதும் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் சுமார் ரூ.3¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் போலீசார் பல இடங்களிலும் ரோந்து சென்றனர்.
Related Tags :
Next Story