மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2021 1:53 AM IST (Updated: 15 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்:
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் அரசு மதுபான கடை முன்பு பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, டாஸ்மாக் கடை திறப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும், ஆட்சிக்கு வரும்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை திறப்பது மக்களை பழிவாங்கும் செயல் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பா.ம.க.வினர், வணிகர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story