பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. முதல் நாளில் 71 பேர் சேர்ந்தனர்.
அரியலூர்:
மாணவர் சேர்க்கை
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் மொத்தம் 71 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்தனர்.
அவர்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மற்றும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கியது. தலைமை ஆசிரியர் சாமிதுரையிடம் மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை கொடுத்தனர்.
பாட புத்தகங்கள்
இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் இலவச பாட புத்தகங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story